Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் இன்று குழந்தைகளுக்கு விஜயதசமி வித்யாரம்பம் செய்யப்பட்டது - Mayiladuthurai News மயிலாடுதுறையில் இன்று குழந்தைகளுக்கு விஜயதசமி வித்யாரம்பம் செய்யப்பட்டது - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் இன்று குழந்தைகளுக்கு விஜயதசமி வித்யாரம்பம் செய்யப்பட்டது

குழந்தை பள்ளிக்கு செல்லும் அல்லது கல்வி கற்கத் துவங்கும் நாளை மிகவும் புனிதமாக கருதும் விசேஷமான தருணத்தை கொண்டாடும் நாள்தான் விஜயதசமி. ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தையின் கல்வியில் அதிக அக்கறை செலுத்த விரும்புவது இயற்கையே. நவராத்திரியில் முப்பெருந்தேவிகளின் பூஜைகள் முடிந்த பின்பு வரும் பத்தாவது நாளான விஜயதசமியன்று தொடங்கப்படும் எந்த ஒரு காரியமும் அது சிறந்த வெற்றியளிக்கும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. விஜயதசமியன்று குழந்தைகளுக்கு புதிய கலைகளான பாட்டு, இசைக்கருவி இசைத்தல், நடனம், ஒவியம் போன்ற கலைகளை கற்க பள்ளிகளில் சேர்ப்பார்கள். ஏற்கனவே இக்கலையை கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் தங்கள் குருவிற்கு சிறப்பு தட்சணை அளித்து சிறிது நேரமாவது இந்த நல்ல நாளில் அக்கலையை பயிலுவார்கள். அந்த வகையில் இன்று மயிலாடுதுறை சில்வர் ஜீப்ளி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் (TARGET) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நல்ல நேரத்தில் குழந்தைகளின் நாக்கில் நெல்லால் எழுதியும், அரிசியில் குழந்தைகளை எழுத செய்தும் வித்யாரம்பம் செய்யப்பட்டது. அக்‌ஷரபியாசம் என்றும் அழைக்கப்படும் இந்நிகழ்ச்சியை கோயில்களிலோ, பள்ளியிலோ அல்லது வீட்டிலோ செய்யலாம். கோயில்களில் செய்யும்போது நல்ல நேரம் பற்றி யோசிக்க வேண்டாம். பள்ளியில் அல்லது வீட்டில் செய்யும்போது நல்ல நேரம் பார்த்து தான் விஜயதசமி வித்யாரம்பம் செய்ய வேண்டும். வித்யாரம்பம் செய்வதில்  குருவின் பங்கே மிகவும் முக்கியம்,  அதனால் தான் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளியில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய விரும்புகின்றனர்.