Mayiladuthurai Newsகுடியிருப்பு பகுதியில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீர் - Mayiladuthurai News குடியிருப்பு பகுதியில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீர் - Mayiladuthurai News

குடியிருப்பு பகுதியில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீர்

மயிலாடுதுறை நவம்பர் 24, மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் செப்டிக் டேங் கழிவுநீர், சாக்கடை நீர் ஆகியவை வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் தூர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் தேங்கி நிற்பதால், அவற்றில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை பாதாள சாக்கடை திட்டத்தில் ஆங்காங்கே கழிவுநீர் வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது. இதனிடையே கூறைநாடு, எடத்தெரு சந்து பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி, அந்தப் பகுதியில் சாலையை கடந்து போக முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. கடந்த ஒரு மாதமாக இந்த பகுதியில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை கழிவுநீர் வெளியேறி கொண்டுதான் இருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
ஒரு வருட வாரண்டியுடன் கூடிய மொபைல் ரூ.777 மட்டுமே. 4G மொபைல் ரூ.2999 மட்டுமே. Fazee Fones 33, காமராஜர் சாலை, மயிலாடுதுறை. தொடர்புக்கு : 81110 85143