Mayiladuthurai Newsமயிலாடுதுறை நகரில் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேறும் செப்டிக் டேங் கழிவுநீர், சாக்கடை நீர் - Mayiladuthurai News மயிலாடுதுறை நகரில் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேறும் செப்டிக் டேங் கழிவுநீர், சாக்கடை நீர் - Mayiladuthurai News

மயிலாடுதுறை நகரில் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேறும் செப்டிக் டேங் கழிவுநீர், சாக்கடை நீர்

மயிலாடுதுறை நவம்பர் 24, மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் செப்டிக் டேங் கழிவுநீர், சாக்கடை நீர் ஆகியவை வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் தூர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் தேங்கி நிற்பதால், அவற்றில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறைலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் குருமூர்த்தி நடுநிலைப் பள்ளி வாசலில் செப்டிக் டேங் கழிவுநீர் குழாய் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. அந்தப் பகுதியில் சாலையை கடந்து போக முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. நேற்று மதியம் நகராட்சி ஊழியர்கள் குருமூர்த்தி நடுநிலைப் பள்ளி வாசல் பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தற்போது வரை கழிவுநீர் வெளியேறி கொண்டுதான் இருக்கிறது. முழுமையாக சரிசெய்யப் படவில்லை. நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் படிக்கும் பள்ளியின் வாசலில் கழிவுநீர் வெளியேறுவதை மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தங்கள் இல்ல கல்யாண சீர்வரிசை ஜமான்கள் மொத்தமாக வாங்க கை ராசி ஸ்தாபனம். ராஜ் எவர்சில்வர் பேன்சி ஸ்டோர். நெ.2 மெயின் ரோடு, மயிலாடுதுறை தொடர்புக்கு: 04364 – 222648