Mayiladuthurai Newsசர்க்கார் திரைப்படத்ததிற்கு எதிராக மயிலாடுதுறையில் போராட்டம் - Mayiladuthurai News சர்க்கார் திரைப்படத்ததிற்கு எதிராக மயிலாடுதுறையில் போராட்டம் - Mayiladuthurai News

சர்க்கார் திரைப்படத்ததிற்கு எதிராக மயிலாடுதுறையில் போராட்டம்

மயிலாடுதுறை நவம்பர் 9, விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசை விமர்சித்து வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றுள்ளதால், படத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆளும் கட்சியைச் சேர்ந்த பலரும் படத்தை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மயிலாடுதுறையில் விஜயா திரையரங்கம் முன்பு ஆளும் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் சர்க்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டுமென முழக்கமிட்டனர். இந்த போராட்டத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இன்று மயிலாடுதுறையில் சர்க்கார் திரையிட்டுள்ள விஜயா மற்றும் கோமதி திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாங்கள் அடகு வைத்துள்ள நகைகளை மீட்க, மறு அடகு வைக்க பண உதவி செய்யப்படும். தொடர்புக்கு: 98425 20040