Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் சந்தோசம் பொங்க சமத்துவ பொங்கல் விழா - Mayiladuthurai News மயிலாடுதுறையில் சந்தோசம் பொங்க சமத்துவ பொங்கல் விழா - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் சந்தோசம் பொங்க சமத்துவ பொங்கல் விழா

மயிலாடுதுறை ஜனவரி 13, மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவ மாணவிகளுடன் சேவை சங்கங்கள் இணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடினர். முகம் நிறைய மகிழ்ச்சி, மனதில் உற்சாக வெள்ளம், மருத்துவர்கள், மாணவ மாணவிகள் மற்றும் சேவை சங்க நண்பர்களுடன் கொண்டாட்டம் என கைகளில் கரும்புகளை ஏந்தி சமத்துவப் பொங்கலை கோலாகலமாக கொண்டாடி சந்தோஷம் அடைந்தனர் செவிலியர்கள். பொங்கல் பானை, இனிப்பு கரும்பு, வண்ண, வண்ண கோலங்கள் என பாரம்பரியம் மாறாமல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் இராஜசேகர் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. ரோட்டரி கிளப் மயிலாடுதுறை டெல்டாவின் தலைவர் Rtn.வெங்கட பாஸ்கர் மற்றும் ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டாவின் தலைவர் Jc.செந்தில் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியில் அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரியும் செவிலியர்களுக்கு பொங்கல் பரிசுகளை சேவை சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் வழங்கினர். நாம் எத்தனையோ பண்டிகைகளை ஆண்டுதோறும் கொண்டாடினாலும், எந்த பண்டிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே உண்டு. ஜாதி, மத பேதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் ஒரே பண்டிகை பொங்கல்தான் என்றால் அது மிகையில்லை. உழைப்பையும், இயற்கையையும் வழிபடுவதை மையமாக வைத்து கொண்டாடப்படும் ஒரே பண்டிகை பொங்கல் பண்டிகை மட்டும்தானே!
தங்கள் இல்ல கல்யாண சீர்வரிசை ஜமான்கள் மொத்தமாக வாங்க கை ராசி ஸ்தாபனம். ராஜ் எவர்சில்வர் பேன்சி ஸ்டோர். நெ.2 மெயின் ரோடு, மயிலாடுதுறை தொடர்புக்கு: 04364 – 222648