Mayiladuthurai News"சபரிமலை புனிதம் காப்போம் கலாச்சாரம் பின்பற்றுவோம்" என மயிலாடுதுறை பெண்கள் உறுதிமொழி - Mayiladuthurai News "சபரிமலை புனிதம் காப்போம் கலாச்சாரம் பின்பற்றுவோம்" என மயிலாடுதுறை பெண்கள் உறுதிமொழி - Mayiladuthurai News

“சபரிமலை புனிதம் காப்போம் கலாச்சாரம் பின்பற்றுவோம்” என மயிலாடுதுறை பெண்கள் உறுதிமொழி

மயிலாடுதுறை துலாக்கட்டம் அருகில் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் 15.10.2018 அன்று திங்கட்கிழமை மாலை 6 மணி அளவில் அனைத்து குருசாமி மற்றும் ஐயப்ப பக்தர்கள் சார்பில் பல நூறு ஆண்டுகளாக தொன்றுதொட்டு பின்பற்றி வரும் பண்பாட்டை, கலாச்சாரத்தை பாதுகாக்கவும் ஸ்ரீ நித்ய பிரம்மச்சாரி ஸ்ரீ ஐயப்பனின் புனிதம் காக்கவும், விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்லும் ஏராளமான ஐயப்ப பக்தர்களின் விரதம் காக்கவும் ஐயப்ப பக்தர்களும், அனைத்து வயது பெண்களும் கலந்து கொண்டு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சபரிமலைக்கு செல்லமாட்டோம் என கையில் தீபம் ஏந்தி உறுதி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஐயப்பனின் சரண கோஷமிட்டு திரளான பக்தர்களும், குறிப்பாக பெண்களும்   கலந்து கொண்டு சபரிமலைக்கு செல்லமாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.