Mayiladuthurai Newsகாவேரி நகரில் சாலை விபத்து ஒருவர் படுகாயம் - Mayiladuthurai News காவேரி நகரில் சாலை விபத்து ஒருவர் படுகாயம் - Mayiladuthurai News

காவேரி நகரில் சாலை விபத்து ஒருவர் படுகாயம்

மயிலாடுதுறை நவம்பர் 9, மேம்பாலத்திலிருந்து காவேரி நகர் நோக்கி தாறுமாறாக ஓடிய ரோடு ரோலர் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி சாலையின் ஓரத்தில் போக்குவரத்து காவலர்களால் நிறுவப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா தூணில் மோதி, அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனையும் சேதப்படுத்தியது. இந்த விபத்தில் சாலையோரம் நின்றிருந்த, சித்தர்காடு பகுதியை சேர்ந்த, இரயிலடியில் சுமை தூக்கும் கூலித்தொழிலாளியான நடராஜன் (வயது 50) மீது வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். உடனடியாக வந்து காவல்துறை அதிகாரிகள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய ரோடு ரோலரை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடினார். ஆர்டர்களின் பேரில் சாப்பாடு, பிரியாணி, மட்டன், சிக்கன், சைனீஸ் வகைகள் மற்றும் மினி டிபன் மிகச்சிறந்த முறையில் செய்து தரப்படும்.