Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் நடைபெற்ற ஊட்டச்சத்து உறுதிமொழி மற்றும் பேரணி - Mayiladuthurai News மயிலாடுதுறையில் நடைபெற்ற ஊட்டச்சத்து உறுதிமொழி மற்றும் பேரணி - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் நடைபெற்ற ஊட்டச்சத்து உறுதிமொழி மற்றும் பேரணி

மயிலாடுதுறை செப் 20, மயிலாடுதுறை வட்டாரத்தில் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலபள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலபள்ளிகளில் நடைபெற்ற ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் செப்டம்பர் 1 முதல் 30 வரை நடைபெற்று கொண்டுருக்கும் போஷன் அபியான் தேசிய ஊட்டச்சத்து மாதவிழாவை முன்னிட்டு இன்று சித்தர்காடு ஏ.அர்.சி விஸ்வநாதன் கலைக்கல்லூரியில் இன்று இயற்கை உணவின் அவசியம் மற்றும் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் பற்றி மயிலாடுத்துறை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.கு. சாயிராபானு தலைமையுரை ஆற்ற திரு.வினோத் குழந்தைகள் நல பாதுகாப்பு நல மாவட்ட தலைவர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.முன்னதாக கல்லூரியின் நாட்டு நலத்திட்ட ஆசிரியர் வரவேற்புரை வழங்கினார் .இந்நிகழ்ச்சியில் அங்ஙவாடி பணியாளர்களின் திட்டம் குறித்த கண்காட்சியும், நாடகம் மூலம் கண்ணோடு கருத்தும் அளிக்கப்பட்டது.இதில் திருமதி ராபியா அவர்கள் உறுதிமொழி கூற அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் பணியாளர்களின் உறுதிமொழி மற்றும் பேரணி சிறப்பாக நடைபெற்றது. போஷன் அபியான் ஊட்டச்சத்து உறுதிமொழி, பேரணி மற்றும் ஊட்ட சத்து விழுப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.