Mayiladuthurai Newsமயிலாடுதுறை -அடையாளம் தெரியாத ஆண் சடலம் குளத்தில் மிதந்தது - Mayiladuthurai News மயிலாடுதுறை -அடையாளம் தெரியாத ஆண் சடலம் குளத்தில் மிதந்தது - Mayiladuthurai News

மயிலாடுதுறை -அடையாளம் தெரியாத ஆண் சடலம் குளத்தில் மிதந்தது

மயிலாடுதுறை ஜனவரி 24, மயிலாடுதுறை அருகே குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தண்ணீரில் மிதந்தது. காவல் துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மயிலாடுதுறை அருகே நீடூர், கடுவங்குடியில் உள்ள இந்த குளத்தில் இன்று மாலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்ததை சிலர் பார்த்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர், தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் மயிலாடுதுறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு வருட வாரண்டியுடன் கூடிய மொபைல் ரூ.777 மட்டுமே. 4G மொபைல் ரூ.2999 மட்டுமே. Fazee Fones 33, காமராஜர் சாலை, மயிலாடுதுறை. தொடர்புக்கு : 81110 85143