Mayiladuthurai Newsஈழத்தமிழர் நீதிக்காக இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் நிறைவேற்ற கோரி பசுமை தாயகம் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் - Mayiladuthurai News ஈழத்தமிழர் நீதிக்காக இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் நிறைவேற்ற கோரி பசுமை தாயகம் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம் - Mayiladuthurai News

ஈழத்தமிழர் நீதிக்காக இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் நிறைவேற்ற கோரி பசுமை தாயகம் சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கம்

மயிலாடுதுறை டிசம்பர் 10, சர்வதேச மனித உரிமைகள் நாளான இன்று மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் முன்பு ஈழத்தமிழர் நீதிக்காக இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் நிறைவேற்ற கோரி பசுமை தாயகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை நடத்திய போரில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொள்ளப்பட்டனர். பன்னாட்டு சட்டங்களும் மீறப்பட்டன. இந்த பன்னாட்டு குற்றச்செயல்களுக்கு நீதிவழங்கக்கோரியும், இதுபோன்ற குற்றங்கள் இனி நிகழாமல் தடுக்கும் நோக்கத்திலும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 31 மற்றும் 34ஆம் கூட்டத்தொடரின் போது இலங்கை அரசின் ஒப்புதலுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் அவற்றை இலங்கை அரசு செயல்படுத்தவில்லை. இந்த தீர்மானங்களின் காலம் வருகிற 2019 மார்ச் மாதத்தோடு முடிவடைகிறது. இதுகுறித்த அறிக்கையை ஐநா மனித உரிமைகள் ஆணையர் சமர்பிக்க உள்ளார். இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தில் ஈழத்தமிழர் நீதிக்காக இலங்கை எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்பதை வலியுறுத்தி பசுமை தாயகம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுசெயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி, மாநில துணை தலைவர் தங்க அய்யாசாமி, மாநில துணை அமைப்பு செயலாளர் காசி பாஸ்கரன், மாவட்ட செயலாளர் விமல், முன்னாள் மாவட்ட செயலாளர் குத்தாலம் கணேசன், நகர தலைவர் கமல்ராஜா, மாவட்ட இளைஞரணி பொருப்பாளர்கள் சுரேஷ், சிட்டி.செந்தில், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அமிருதீன், பசுமை தாயக மாவட்ட அமைப்பாளர் சற்குரு, நகர அமைப்பாளர் சென்சாய்.முருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.