Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி - Mayiladuthurai News மயிலாடுதுறையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை நகராட்சி, அரசினர் பெரியார் மருத்துவமனை மற்றும் தமிழக பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு பேரணி மயிலாடுதுறை தியாகி.ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஆரம்பித்து நகராட்சி, கச்சேரி சாலை, காந்திஜி சாலை வழியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது.பேரணியை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இந்த பேரணியில் தியாகி.ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, C.C.C சமுதாய கல்லூரி, S.K நர்சிங் கல்லூரி மாணவ மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை தாங்கியபடி கலந்து கொண்டனர். பேரணியில் சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், அ.தி.மு.க நகர செயலாளர் V.G.K செந்தில்நாதன், தலைமை மருத்துவர் டாக்டர் இராஜசேகர், மருத்துவர்கள் டாக்டர் சிவகுமார் டாக்டர் முருகன்,மாவட்ட கல்வித்துறை கண்காணிப்பாளர் கண்ணன், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.