Mayiladuthurai Newsமயிலாடுதுறை காவிரியின் இருகரைகளிலும் பஞ்ச மூர்த்திகளுடன் தீர்த்தவாரி - Mayiladuthurai News மயிலாடுதுறை காவிரியின் இருகரைகளிலும் பஞ்ச மூர்த்திகளுடன் தீர்த்தவாரி - Mayiladuthurai News

மயிலாடுதுறை காவிரியின் இருகரைகளிலும் பஞ்ச மூர்த்திகளுடன் தீர்த்தவாரி

மயிலாடுதுறை நவம்பர் 7, துலா மாதம் என்று அழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களும் கங்கை நதியானவள் மயிலாடுதுறை ரிஷப தீர்த்த காவிரியில் வாசம் செய்து தன் மீது ஏற்பட்டுள்ள பாவங்களை போக்கி கொள்கிறாள் என்பது ஐதீகம். இந்த ஐப்பசி மாதம் முழுவதும் திருவிழா நிகழ்கின்ற ஒரே ஊர் மயிலாடுதுறை மட்டும் தான். அந்த வகையில் ஐப்பசி 21 ந் தேதியான இன்று துலா உற்சவமாக பஞ்ச மூர்த்திகளுடன் காவிரியில் நீராடுதல் வைபவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த புண்ணிய தீர்த்த நீராடுதல் வைபவத்தில் அபய பிரதாம்பிகை உடனாகிய மாயூரநாதர், விசாலாட்சி அம்பிகை உடனாகிய விஸ்வநாதர், ஞானம்பிகை உடனாகிய வதான்யேஷ்வரர், அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாரப்பர் மற்றும் பல சிவாலயங்களிலிருந்தும் பஞ்ச மூர்த்திகளுடன் தீர்த்த நீராடுதல் நடைபெற்றது. காவிரியின் தென்கரை, வடகரை இருபுறமும் பஞ்ச மூர்த்திகளுடன் தீர்த்தவாரி நிகழும் வைபவத்தை தரிசிப்பது மிகப்பெரிய புண்ணியமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமண தடைகள் இருப்பவர்கள் ஐப்பசி அமாவசையான இன்று காவிரியில் நீராடினால் தடைகள் விலகும் என்பது ஐதீகம். பத்திர பதிவு, DTP ஒர்க்ஸ், ஜெராக்ஸ், கலர் ஜெராக்ஸ் மற்றும் வீடு மனை வாங்க விற்க அணுகவும். பெரிய கண்ணாரத்தெரு, நேஷனல் பர்னிச்சர் எதிரில், மயிலாடுதுறை. தொடர்புக்கு: 99428 23269