Mayiladuthurai Newsகஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் - Mayiladuthurai News கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் - Mayiladuthurai News

கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொண்ட ரஜினி மக்கள் மன்றத்தினர்

மயிலாடுதுறை நவம்பர் 17, தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அச்சுறுத்தி வந்த கஜா புயல் 15ஆம் தேதி நள்ளிரவில் கரையைக் கடந்தது. கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இதனையடுத்து கஜா புயலால் பாதிப்பிற்குட்பட்ட மக்களுக்கு மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தினர் நிவாரண பணியை மேற்கொண்டனர். முதற்கட்ட நிவாரண பணியாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக மயிலாடுதுறை கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் நேற்று காலை 7 மணியளவில் 2000 நபர்களுக்கு உணவு தயாரிக்கப்பட்டு, பின்னர் ஆக்கூர், திருக்கடையூர், பொறையார், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. கஜா புயல் நிவாரண பணிகளில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அதன் மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் இளவரசன், நாகை மாவட்ட பொறுப்பாளர் கலியராஜ், மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் சுதந்திரவீரன், மாவட்ட துணை செயலாளர்கள் குபேந்திரன், சாஹா மாலிம், பவுன் முருகானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் இராமகிருஷ்ணன், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.