Mayiladuthurai Newsடெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீரின் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு முகாம் - Mayiladuthurai News டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீரின் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு முகாம் - Mayiladuthurai News

டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீரின் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு முகாம்

மயிலாடுதுறை நவம்பர் 12, டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதில் நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிப்பதால், தமிழக அரசும், பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும் ஆங்காங்கே நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள். மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றம் மற்றும் அரசினர் பெரியார் மருத்துவமனையும் இணைந்து மயிலாடுதுறை நகர ரஜினி மக்கள் மன்றத்தின் நகர செயலாளர் பவுன் முருகானந்தம் தலைமையில் மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் இன்று டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் நிலவேம்புக் குடிநீரின் உபயோகம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் காலை 10 மணி முதல் 12 மணி வரை பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனையின் சித்த மருத்துவ பிரிவு மருத்துவர் சுகுணா அவர்களின் தலைமையில் உதவியாளர்கள் நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் நிலவேம்பு கசாயத்தை ஆர்வமுடன் வாங்கி குடித்தனர். இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட பொருப்பாளர் கலியராஜ், மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன், மாவட்ட இணை செயலாளர் சுதந்திரவீரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் இராமகிருஷ்ணன், வர்த்தகர் அணி செயலாளர் முரளி, வழக்கறிஞர் அணி செயலாளர் பிரபாகரன், மயிலாடுதுறை நகர துணை செயலாளர் ரஜினி ஜலால், நகர நிர்வாகி அந்தோணிசாமி, நகர செயற்குழு உறுப்பினர்கள் திருமலை சிவா, விடியோ மணி, போட்டோ மதன், சுதாகர் , செந்தில் ஆனந்தன், மயிலாடுதுறை நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர். டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது. இதை கட்டுப்படுத்த தவறும்போது மரணத்தை சந்திக்க வேண்டியதாகி விடுகிறது. நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.