Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் மண்டல அளவிலான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் மண்டல அளவிலான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் மண்டல அளவிலான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்

மயிலாடுதுறை அக் 24, நம்முடைய தமிழர்களின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பறைசாற்றும் விதமாக நம்முடைய மரபு சார்ந்த தற்காப்பு கலைகள் இருந்து வந்துள்ளன. அத்தகைய பாரம்பரியத்தை காக்கும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை உள்ளடக்கிய மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின் சார்பில் சில்வர் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இன்று சிலம்பம் போட்டியில் 70 பள்ளிகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மூன்று பிரிவுகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை நிரூபித்தனர். போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் செயல்பட்டனர். இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.