Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் பசியால் வாடுபவர்களுக்கு தினமும் உணவளிக்கும் இளைஞர் பட்டாளம் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் பசியால் வாடுபவர்களுக்கு தினமும் உணவளிக்கும் இளைஞர் பட்டாளம் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் பசியால் வாடுபவர்களுக்கு தினமும் உணவளிக்கும் இளைஞர் பட்டாளம்

மயிலாடுதுறையை சேர்ந்த 30 பேர் கொண்ட இளைஞர் குழு மாயூரநாதர் கைலாய வாத்தியக்குழு என்ற பெயரில் அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இசைகருவிகளை கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அப்போது அவர்களுக்கு உணவு கோயில்களில் தரப்படும்.அது மட்டுமில்லாமல் கோயில்களில் எல்லோருக்கும் உணவு வழங்கப்படுவதை கவனித்த இளைஞர்கள் மனதில் பசியால் வாடும் ஆதரவற்றோருக்கு உணவளிக்க வேண்டுமென்ற எண்ணம் பிறந்துள்ளது. அதன் காரணமாக மயிலாடுதுறையில் கடந்த ஜூலை மாதம் முதல் இளைஞர் குழு தினமும் காலையில் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்று ஆதரவற்ற முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டோர் ஆகியோரை தேடி தேடிச் சென்று உணவளித்து வருகின்றனர்.
தினமும் காலையில் 6 மணிக்கு மயிலாடுதுறை பாலக்கரை காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் ஆரம்பித்து மணிக்கூண்டு, பேருந்து நிலையம், சவேரியார் சர்ச், கூறைநாடு, மேம்பாலம் மற்றும் இரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள ஆதரவற்றோருக்கு பசியாற்றுகின்றனர். முதல் மாதம் முழுவதும் தங்களது பணத்தை செலவழித்த இவர்களுக்கு தற்போது சமூக ஆர்வலர்களும் உதவிக்கரம் நீட்டுகின்றனர். இளைஞர் குழுவும் பண உதவி செய்பவர்களை உணவளிக்கும் போது அழைத்து சென்று அவர்களது கைகளால் ஆதரவற்றோருக்கு உணவளிக்கின்றனர். வளமான இந்தியாவை உருவாக்க வலிமையான இளைஞர்கள் வேண்டுமென்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனைக்கு இலக்கணமாய் உள்ளனர் மயிலாடுதுறை இளைஞர்கள்.
மிகக்குறைந்த வட்டியில் 1 கிராமுக்கு ரூ. 2275 வரை தங்க நகை கடன். (விமலாம்பிகை திருமண மண்டபம் எதிரில்)