Mayiladuthurai Newsநம்ம ஊரு சாதனை பெண்மணி - Mayiladuthurai News நம்ம ஊரு சாதனை பெண்மணி - Mayiladuthurai News

நம்ம ஊரு சாதனை பெண்மணி

தன் மகளின் மருத்துவ கனவை நனவாக்கிய மயிலாடுதுறையின் பெண் கூலித்தொழிலாளி

நம்ம ஊரு சாதனை பெண்மணி

இவர்தாங்க நம்ம மயிலாடுதுறையின் சாதனை பெண்மணி ராஜாமணி. மயிலாடுதுறை இராணி மஹால் அருகில் தட்டாரத்தெருவில் வசித்து வருகிறார். மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன் வெட்டி கழுவி சுத்தம் செய்து தரும் கூலித்தொழிலாளி. தற்போது 44 வயதாகும் ராஜாமணிக்கு 2 குழந்தைகள். மூத்த பையன் இரத்த சுரப்பி வளர்ச்சி இல்லாததினால் உடல் ஊனமுற்று வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். இரண்டாவது மகள் விஜயலட்சுமி நான்காம் ஆண்டு மருத்துவம் (Doctor of Medicine) ரஷ்ய நாட்டில் படிக்கிறார். 22 ஆண்டுகளுக்கு முன் மருத்துவ மாணவி விஜயலட்சுமி 11 மாத குழந்தையாக இருக்கும் போது அவரது தந்தை ராஜேந்திரன் இறந்துவிட்டார். தன் கணவனை இழந்துவிட்ட நிலையில் தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பெரும் பொருப்பு ராஜாமணிக்கு. மீனை கழுவி சுத்தம் செய்து தரும் வருமானத்தில் தன் பிள்ளைகளை வளர்த்து வந்தார் ராஜாமணி. தன் வியர்வை சிந்திய உழைப்பால் தற்போது தன் மகளின் மருத்துவ கனவையும் நனவாக்கியுள்ளார். தன் மகளின் மருத்துவ படிப்பிற்காக ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 6 லட்சம் செலவாகிறது. இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாமல் தன் குடியிருக்கும் வீட்டையும் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ராஜாமணி.

கனவு என்னும் கரையை நோக்கி
ஆசை என்னும் அலைகளை கண்டுகொள்ளாமல்,
அறிவுரை என்னும் ஆழத்தை நினைக்காமல்,
கஷ்டங்கள் பல கண்டாலும்
கலங்கரை விளக்கின் வெளிச்சத்தை(மருத்துவ கனவு) மனதில் கொண்டு,
கடந்து வந்த பாதையை நினைத்து கவலைபடாமல்
கரைதொடும் நேரம் தூரம் இல்லை என நினைக்கும்,
உறுதியான மனம் தந்த இறைவா!

அவளின் கனவுகளை கலைக்காமல்
ஒவ்வொன்றாய் நனவாக்கவே
இறைவா நீ அவளை
எனக்களித்தாய்!

-ராஜாமணி