Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை - Mayiladuthurai News மயிலாடுதுறையில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழை

வெப்பச்சலனம் காரணமாக மயிலாடுதுறையில் இன்று இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மயிலாடுதுறையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் 15 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.

மயிலாடுதுறையில் இன்று குறைந்த அளவு வெப்பநிலை : 25°

அதிக அளவு வெப்பநிலை : 30°

மழை : 50%

ஈரப்பதம் : 91%

காற்று : 11 km/h

தமிழகத்திற்கு வரும் 7ம் தேதி ரெட் அலர்ட் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மிக மிக மோசமான வானிலை இருக்கும் பட்சத்தில் ரெட் அலர்ட் அறிவிக்கப்படும். அதாவது, மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு முதலிய மக்களின் இயல்பு வாழக்கையினை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது.