Mayiladuthurai Newsமயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் ஆறாம் ஆண்டு விழா - Mayiladuthurai News மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் ஆறாம் ஆண்டு விழா - Mayiladuthurai News

மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் ஆறாம் ஆண்டு விழா

தமிழுக்கும், தமிழருக்கும் இத்தரணியில் தன்னிகரில்லாப் புகழையும் பெருமையையும் சேர்ந்த உலகப் பொது மறையாம் திருக்குறளை இயற்றிதந்த, அய்யன் திருவள்ளுவர் பெருமகனைப் போற்றிடவும், திருக்குறள் அறநெறியைப் பரப்புரை செய்திடவும், 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மயிலாடுதுறை திருக்குறள் பேரவையின் ஆறாம் ஆண்டு விழா 30-09-2018 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மயிலாடுதுறை கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் பேரவை நிறுவனர் அமரர் கோ.நீலகண்டன் மற்றும் மேனாள் செயளாலர் அமரர் ந.கலியபெருமாள் நினைவு அரங்கத்தில் பேரவைத் தலைவர் முனைவர் சி.சிவசங்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இவ்வினிய விழாவில் நல்லாசிரியர் ந.செ.இளமுருகுச்செல்வன் அவர்கள் பேரவையின் ஆண்டு அறிக்கையை முன்னுரைத்தார். பேரவை பொருளாளர் திரு.சு.இராமசந்திரன் அவர்கள் திருவள்ளுவருக்கு மயிலாடுதுறையில் சிலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்களை முன்மொழிந்தார். மயிலாடுதுறையின் முதுபெரும் வழக்கறிஞர் அரிமா.நா.கு.கிருட்டிணமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் திரு.கி. பார்த்திபராசா அவர்கள் “நாடக மரபும் திருக்குறளும்” என்ற தலைப்பில் தொடக்கவுரை நிகழ்த்தினார். நீதியரசர் மாண்புமிகு தி.நெ.வள்ளிநாயகம் அவர்கள் “உச்சநீதி மன்றத்திற்கு “குறள்” (குரல்) கொடுப்போம்” என்கிற தலைப்பில் சிறப்புரையாற்ற இருந்தார். ஆனால் அவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தன்னுடைய கருத்தை கோப்பாக அனுப்பினார். அதனை பேரவை தலைவர் முனைவர் சி. சிவசங்கரன் அவர்கள் வாசித்தார். இவ்வினிய விழாவில் நீதியரசர் சிறப்புரையாற்ற வர இயலாத காரணத்தினால் சேதுபதி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

திருவண்ணாமலை ஆதீனம் குருமகா சந்நிதானம் தவத்திரு.குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் அருளுரை வழங்கி விழா நிறைவுப் பேருரை ஆற்றினார். பேரவையின் செயற்குழு உறுப்பினர் திரு.ச.இராமதாசு அவர்கள் நன்றியுரை வழங்கினார். நல்லாசிரியர் இரா.செல்வகுமார் அவர்களும் கனவு ஆசிரியர் வீதி.முத்துக்கணியன் அவர்களும் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சிறப்பித்தனர்.