Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமூக தீமைகளுக்கு எதிரான மாபெரும் மனித சங்கிலி - Mayiladuthurai News மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமூக தீமைகளுக்கு எதிரான மாபெரும் மனித சங்கிலி - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சமூக தீமைகளுக்கு எதிரான மாபெரும் மனித சங்கிலி

மயிலாடுதுறையில் 20-10-2018 அன்று சனிக்கிழமை மாலை நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், உலகில் நடைபெறக்கூடிய பல்வேறு குற்றச்செயல்களுக்கு முதன்மை காரணம் மது என்ற போதை பொருள் தான். அதேபோல் பல குடும்பங்களின் சீரழிவுக்கு காரணம் வட்டி. எனவே மது இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். மது குடிப்பவரின் உடலுக்கு மட்டுமல்லாமல் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்பதை அறிந்தும் பலர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர் என்பது வேதனையான விஷயம். இதனால் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமில்லாமல் மதுவால் கேன்சர், கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகிறது. எனவே மக்களுக்கு கேடு தரும் மதுவை உடனடியாக அரசாங்கம் தடை செய்ய வேண்டும், அதேபோல் வட்டியால் பல குடும்பங்கள் சீரழிவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என நாகை மாவட்ட தவ்ஹீத் ஜமாத் சார்பில் மது மற்றும் வட்டிக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் அதன் நாகை மாவட்ட தலைவர் பக்ருதீன் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மாநில செயலாளர் தாவூத் கைசர் மது மற்றும் வட்டிக்கு எதிராக சிறப்புரையாற்றினார். இந்த போராட்டத்தில் திரளாக பொதுமக்களும் இஸ்லாமிய பெண்களும் கலந்து கொண்டனர்.