Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் துலா உற்சவ தேரோட்டம் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் துலா உற்சவ தேரோட்டம் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் துலா உற்சவ தேரோட்டம்

மயிலாடுதுறை நவம்பர் 15, மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவமாக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதமானது துலா மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுதல் மிக சிறப்புடையதமாகும்.  இந்த ஆண்டு துலா உற்சவம் கடந்த அக்டோபர் 18ந் தேதி முதல் தீர்த்தவாரியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடைசி பத்துநாள் உற்சவம் கடந்த 7ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13ம் தேதி திருக்கல்யாணமும் அதனை தொடர்ந்து இன்று 9ஆம் நாள் திருவிழா தேர் திருவிழாவானா திருத்தேரோட்டம் நடைபெற்றது. அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளி நான்கு வீதிகள் வழியாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பண்டார சன்னதி சுவாமிகள் வடம் பிடித்து திருத்தேரோட்டத்தை தொடங்கிவைக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்திழுக்க திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள், சிவபுரம்வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் மற்றும் கண்காணிப்பாளர் அகோரம் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இன்று மாலை 5 மணிக்கு நடக்கயிருந்த திருத்தேரோட்டம் கஜா புயல் காரணமாக காலை 10 மணிக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. விழாவின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி திருவிழா நாளை(16ஆம் தேதி) நடைபெறவுள்ளது.

மல்டி கலர் விசிட்டிங் கார்டு ரூ 350/- முதல், மல்டி கலர் அழைப்பிதழ்கள் ரூ 3.25/- முதல் . தொடர்புக்கு: பத்மா டிஜிட்டல் ஸ்டுடியோ ஆடுதுறை. Cell: 9787095865