Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி - Mayiladuthurai News மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசன போட்டி

மயிலாடுதுறை அக் 21 இந்தியன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, நேரு யுவகேந்திரா நாகை மாவட்டம் சார்பில் மாநில அளவிலான யோகாசன போட்டி தியாகி.G.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி முதல் கல்லூரி வரை மாணவ மாணவிகள் வயது அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 10 பிரிவுகளில் பங்கேற்றனர். போட்டிகளின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். மாஸ்டர் ரவிச்சந்திரன் முன்னிலை நடைபெற்ற இந்த போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக அண்ணா திராவிட கழக அவைத்தலைவர் P.N.ரத்தினகுமார், மாவட்ட செயலாளர் சுதாகர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாணவ மாணவிகளின் பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்