Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம்

இன்றைய அரசியல் சூழலில் நாம் தமிழர் கட்சியின் தேவையும் பங்களிப்பும் குறித்து கொள்கை விளக்க பொதுக்கூட்டம் 20/10/2018 அன்று சனிக்கிழமை மாலை, மயிலாடுதுறை விஜயா திரையரங்க சாலையில் நாகை மண்டல செயலாளர் சு.கலியபெருமாள் தலைமையில், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாசன், மயிலாடுதுறை தொகுதி செயலாளர் தமிழ் செந்தில், சீர்காழி தொகுதி செயலாளர் தி.குமார், பூம்புகார் தொகுதி செயலாளர் செம்பை சீலன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாநில இளைஞர் பாசறையை சேர்ந்த பேராசிரியர் கல்யாண சுந்தரம் ஆன்மீகமும் அரசியலும் என்ற தலைப்பிலும், இந்து, இந்தி = இந்தியா – தமிழன் என்ற தலைப்பில் கொள்கை பரப்பு செயலாளர் வெற்றிசீலனும் சிறப்புரையாற்றினர். சாதி மத அரசியலை விட இன அரசியலே மேலானது என்ற கருத்தை வலியுறுத்தி இந்த பொதுக்கூட்டம் நிறைவுபெற்றது.