Mayiladuthurai Newsமக்கள் பணியில் மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தினர். - Mayiladuthurai News மக்கள் பணியில் மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தினர். - Mayiladuthurai News

மக்கள் பணியில் மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தினர்.

மயிலாடுதுறை இரயில்வே ஸ்டேஷன் அருகே சின்னப்பள்ளிவாசல் தெருவில் கடந்த சில நாட்களாக கழிவுநீர் வெளியாகி தெரு முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இது குறித்து அந்த பகுதி மக்கள் ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் கூறினர். உடனடியாக இந்த புகார் மயிலாடுதுறை ஆணையரிடம் எடுத்து செல்லப்பட்டு, அவரும் இரண்டு நாட்களுக்குள் இந்த பிரச்சினையை சரி செய்து கொடுத்துள்ளார். துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் P.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மயிலாடுதுறை ரஜினி மக்கள் மன்றத்தின் நகர செயலாளர் பவுன் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.