Mayiladuthurai Newsபசுமை தாயகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் - Mayiladuthurai News பசுமை தாயகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் - Mayiladuthurai News

பசுமை தாயகம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

அக்டோபர் 2, மகாத்மா காந்தி பிறந்தநாளில் பிளாஸ்டிக் இல்லா தமிழ்நாடு என்ற நோக்கத்தோடு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பை வழங்கும் பிரச்சார  நிகழ்ச்சி, மருத்துவர் இராமதாசு அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பபட்டது. இதன் முத்தாய்ப்பாக நாகை மாவட்ட பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்     02-10-2018 அன்று மாலை 6 மணிக்கு பாமக மாநில துணை பொதுசெயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் மயிலாடுதுறை தபால் நிலையம் எதிரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் R.விமல்பாமக மாநில செயற்குழு உறுப்பினர் வி.சி.கே காமராஜ்,  மாநில துணை அமைப்பு செயலாளர் காசி பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி பொருப்பாளர்கள் சுரேஷ், சிட்டி.செந்தில், மாவட்ட   சிறுபான்மை பிரிவு தலைவர் K. அமீருதீன், பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் சற்குரு, நகர அமைப்பாளர் சென்சாய்.R. முருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.