Mayiladuthurai Newsடெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர். - Mayiladuthurai News டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர். - Mayiladuthurai News

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க நிலவேம்பு கசாயம் வழங்கிய ரஜினி மக்கள் மன்றத்தினர்.

மயிலாடுதுறை அக்டோபர் 31, டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பதில் நிலவேம்பு கசாயம் முக்கிய பங்கு வகிப்பதால், தமிழக அரசும், பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும் ஆங்காங்கே நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள். மயிலாடுதுறை ஒன்றிய ரஜினி மக்கள் மன்றத்தினர் ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமையில் அருவாப்பாடி ஊராட்சி, வை.பட்டவர்த்தி பிரதான சாலையில் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் இராமகிருஷ்ணன், மயிலாடுதுறை ஒன்றிய இணை செயலாளர் செந்தில்குமார், மயிலாடுதுறை ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன், இணை செயலாளர் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர். டெங்கு காய்ச்சல் ஏற்படும்போது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கை வேகமாக குறைகிறது. இதை கட்டுப்படுத்த தவறும்போது மரணத்தை சந்திக்க வேண்டியதாகி விடுகிறது. நிலவேம்பு கசாயம் அருந்தும்போது, அது ரத்தத்தில் தட்டணுக்கள் குறைவதை தடுத்து நிறுத்துவதோடு, தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.