Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் மீண்டும் பாதாள சாக்கடை பள்ளம்: பொதுமக்கள் அச்சம் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் மீண்டும் பாதாள சாக்கடை பள்ளம்: பொதுமக்கள் அச்சம் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் மீண்டும் பாதாள சாக்கடை பள்ளம்: பொதுமக்கள் அச்சம்

மயிலாடுதுறை டிசம்பர் 7, மயிலாடுதுறை, சப்ஜெயில் பக்கவாட்டில் பாதாள சாக்கடையில் இன்று காலை பள்ளம் விழுந்ததால், பொது மக்கள் பீதியடைந்தனர். ஏற்கனவே கச்சேரி சாலை, தரங்கம்பாடி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பாதாள சாக்கடையில் திடீரென பள்ளம் ஏற்பட்டு சரி செய்யபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் அருகில், நான்கு முனை சந்திப்பில் பாதாள சாக்கடையில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த இடத்தில் நகராட்சி அலுவலர்கள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் குழித்தோண்டி பாதாள சாக்கடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சியில் பாதாள சாக்கடையில் தொடர்ந்து பள்ளம் விழுந்து வருவதால் பொது மக்கள் சாலையில் நடந்து செல்ல பீதியடைந்துள்ளனர்.
கட்டிடங்கள் எவ்வித அதிர்வின்றி சிறந்த முறையில் உடைத்து தரப்படும். கான்கிரீட்டில் துளையிட்டு கெமிக்கல் மூலம் கம்பி இணைத்து தரப்படும். சீலிங்கில் பேன், ஊஞ்சல், குழந்தை தொட்டில் ஹூக்கு பிட்டிங்ஸ் செய்து தரப்படும். மெஷின்கள் சர்வீஸ், ஸ்பேர் & சேல்ஸ், 12, காந்திஜி ரோடு, கூறைநாடு, மயிலாடுதுறை. தொடர்புக்கு: 94438 73581