Mayiladuthurai Newsமுகநூலில் தினம் ஒரு கவிதை என ஆயிரம் கவிதை எழுதிய மயிலாடுதுறையின் கவிப்பேரரசு - Mayiladuthurai News முகநூலில் தினம் ஒரு கவிதை என ஆயிரம் கவிதை எழுதிய மயிலாடுதுறையின் கவிப்பேரரசு - Mayiladuthurai News

முகநூலில் தினம் ஒரு கவிதை என ஆயிரம் கவிதை எழுதிய மயிலாடுதுறையின் கவிப்பேரரசு

மயிலாடுதுறை அக்.21 முகநூலில் ஆயிரம் கவிதை எழுதிய கவிஞர் இரா.சிவகுமார் அவர்களுக்கு மயிலாடுதுறையை சேர்ந்த முகநூல் நண்பர்கள் சார்பில் அரிமா சங்க தலைவர், ஜெனிபர் ஸ்வீட்ஸ் உரிமையாளர் பவுல்ராஜ் அவர்களின் தலைமையில் மயிலாடுதுறை, யூனியன் கிளப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மட்டுமில்லாமல் கடலூர், ஈரோடு, பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் முகநூல் நண்பர்கள் வந்து கவிஞரை வாழ்த்தி பேசினார்கள். மயிலாடுதுறையை சேர்ந்த ஒருவர் முகநூலில் எழுதிய கவிதைக்காக வெளியூரிலிருந்தெல்லாம் முகநூல் நண்பர்கள் வந்திருக்கிறார்கள் என்பதே அவரது கவிதையின் சொல் வன்மைக்கு சான்றாக அமைந்தது கவிஞர் பூவை சாரதி அவர்கள் கவிஞர் இரா.சிவக்குமார் அவர்களை வாழ்த்தி தான் எழுதிய “கதிரவன் காலையில் எழுந்திடுமே” என்ற பாடலை பாடினார். இந்த விழாவில் பல கவிஞர்கள், எழுத்தாளர், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு கவிஞரை வாழ்த்தி பேசினார்கள். வாழ்த்தி பேசிய பலர் இவர் எழுதிய கவிதைகளை விரைவில் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். சிறப்புரையாற்றிய திரைப்பட இயக்குனர் யார் கண்ணன் அவர்கள், கவிஞர்கள் இனி காதலையும் காமத்தையும் தவிர்த்து விட்டு மகாகவி பாரதியைப் போல் சமூக சிந்தனையோடு  எழுத வேண்டும் என வலியுறுத்தினார். இறுதியாக கவிஞர் இரா.சிவக்குமார் ஏற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேசிய மேல்நிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரப்பாண்டியன், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் கலந்து கொண்டனர். பத்திரிகை ஆசிரியர் சிவசுப்பிரமணியன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்