Mayiladuthurai Newsமக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா - Mayiladuthurai News மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா - Mayiladuthurai News

மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா

மயிலாடுதுறை அக் 27, கமலஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மக்கள் நீதி மய்யத்தின் நாகை மாவட்ட அலுவலகம் மயிலாடுதுறையிலுள்ள லூர்து மருத்துவமனை அருகில் மேட்டு தெருவில் இன்று திறக்கப்பட்டது. பிற்பகல் 3 மணிக்கு மண்டல பொறுப்பாளர் குமரவேல் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார். அலுவலகத்தை திறந்து வைத்து பேசிய மண்டல பொறுப்பாளர், நம்மவரின் கொள்கைகளை ஸ்மார்ட் போன் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நாம் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து பேசிய மாவட்ட பொறுப்பாளர் M.N.ரவிச்சந்திரன் அவர்கள் அரசியலில் பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும், அதுமட்டுமில்லாமல் எல்லா கிராம சபை கூட்டங்களிலும் பொதுமக்கள் பெரும்பான்மையாக கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.