Mayiladuthurai Newsமயிலாடுதுறை ஒன்றிய கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் - Mayiladuthurai News மயிலாடுதுறை ஒன்றிய கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் - Mayiladuthurai News

மயிலாடுதுறை ஒன்றிய கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள்

மயிலாடுதுறை ஒன்றிய குளிச்சார் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்.

மயிலாடுதுறை ஒன்றியத்திற்குட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திராளான தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 2ந் தேதி நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மயிலாடுதுறை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் நாகை வடக்கு மாவட்ட செயலாளர் திரு M.N.ரவிச்சந்திரன் தலைமையில் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்.

இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஆட்சியும் அதிகாரமும் எங்கிருந்து பெறப்படுகிறதோ, அங்கேயே அது மீண்டும் தரப்படும் என்பதற்கான சான்றுதான் ஓட்டு உரிமையும், கிராம சபையும். நாட்டின் முதுகெலும்பாக கருதப்படும் கிராமங்களின் வளர்ச்சிக்காக இயற்றப்பட்டதே கிராம சபை கூட்டங்கள்.