Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் உயிருக்கு போராடிய வயதான மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்த சமுக ஆர்வலர்கள் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் உயிருக்கு போராடிய வயதான மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்த சமுக ஆர்வலர்கள் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் உயிருக்கு போராடிய வயதான மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்த சமுக ஆர்வலர்கள்

மயிலாடுதுறை நவம்பர் 17, மயிலாடுதுறையில் காவிரித்தாய் சிலை பக்கத்தில் விநாயகர் கோயில் அருகே வயதான மூதாட்டி உடல்நிலை சரியில்லாமல் ஈ, கொசு மொய்க்கும் நிலையில் கடந்த 10 நாட்களாக பசி பட்டினியோடு அவல நிலையில் சுருண்டு கிடந்தார். இவர்களை போன்றவர்களை உரிய முறையில் கவனித்துப் பராமரிக்க மனமின்றி உறவினர்களே கைவிட்டுச் செல்லும் அவலம் தொடர்கதையாக உள்ளது. இதனால் அவர் யார் என்றும் எந்த ஊர் என்றும் தெரியாத நிலையில் உள்ளது. இவரை கண்ட மயிலாடுதுறை சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஒன்று சேர்ந்து மயிலாடுதுறை ஆணையரின் அனுமதி பெற்று மயிலாடுதுறை அரசினர் பெரியார் மருத்துவமனையின் தலைமை மருத்துவரின் ஆலோசனையின் படி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எத்தனையோ உயிரினங்கள் இருந்தாலும் மனித நேயத்தால் தான் மனித இனத்துக்கு மரியாதை. இந்த மனித நேய உணர்வுதான் அடுத்தவர் துக்கத்திலும், துயரத்திலும் பங்கெடுக்க வைக்கிறது. இதற்காக இளைஞர்கள் தாமாக முன்வந்து உதவி செய்தது மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு உதாரணமாக இருந்தது. மயிலாடுதுறையில், பேருந்து நிலையம் , இரயிலடி, கூறைநாடு உள்ளிட்ட நகர்ப் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியவர்களை மீட்டு, காப்பகத்திற்கு கொண்டு சென்று காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது .
தங்கள் இல்ல கல்யாண சீர்வரிசை ஜமான்கள் மொத்தமாக வாங்க கை ராசி ஸ்தாபனம். ராஜ் எவர்சில்வர் பேன்சி ஸ்டோர். நெ.2 மெயின் ரோடு, மயிலாடுதுறை தொடர்புக்கு: 04364 – 222648