Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் தமிழக அரசுக்கு எதிராக தி.மு.கவின் மாபெரும் பொதுக்கூட்டம் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் தமிழக அரசுக்கு எதிராக தி.மு.கவின் மாபெரும் பொதுக்கூட்டம் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் தமிழக அரசுக்கு எதிராக தி.மு.கவின் மாபெரும் பொதுக்கூட்டம்

தமிழக அரசுக்கு எதிராக தி.மு.கவின் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம். எடப்பாடி அ.தி.மு.க அரசுக்கு எதிராக தி.மு.கவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை நகர கழக செயலாளர் திரு.குண்டாமணி(எ) என்.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் திருமதி.பவானி சீனிவாசன் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கழக முன்னணியினர் முன்னிலை வகித்தனர். தலைமைக்கழக தீர்மானக்குழு செயலாளர்கள் முனைவர் R.T.சபாபதிமோகன், திருமிகு. குழந்தை தமிழரசன், நாகை வடக்கு மாவட்ட கழக பொருப்பாளர் திருமிகு.நிவேதா எம்.முருகன் , மாநில விவசாய அணி செயலாளர் திரு.A.K.S.விஜயன் Ex.MP, திரு.பி.கல்யாணம் Ex.MLA மற்றும் முன்னாள் சட்டமன்றஉறுப்பினர்கள் திரு.கி.சத்தியசீலன், திரு.ஜெக வீரபாண்டியன், திரு.R.அருட்செல்வன், திரு.க.அன்பழகன், திரு.M.பன்னீர்செல்வம், திரு.M.M.சித்திக் உள்ளிட்டோரும் சிறப்புரையாற்றினார்கள்.
இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.