Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் களைகட்டியது தீபாவளி விற்பனை: புத்தாடைகள், பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்தனர் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் களைகட்டியது தீபாவளி விற்பனை: புத்தாடைகள், பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்தனர் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் களைகட்டியது தீபாவளி விற்பனை: புத்தாடைகள், பட்டாசு மற்றும் இனிப்புகள் வாங்க கடைகளில் மக்கள் குவிந்தனர்

நவம்பர் 3, தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன. அதுமட்டுமில்லாமல் இன்று தான் மழை விட்டு சூரியன் தலைகாட்ட ஆரம்பித்துள்ளதால் இன்று மயிலாடுதுறை கடைத்தெருவில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். பட்டமங்கல தெரு, மணிகூண்டு, மாரியம்மன் கோயில் ரோடு, கூறைநாடு உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதியது. தீபாவளிக்கு ஆடைகள்,பட்டாசு மற்றும் பிற பொருட்களை வாங்க வரும் மக்களைக் கவரும் வகையில் பல கடைகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.    பிரபலமான கடைகள் மட்டுமல்லாமல், சிறிய கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. பண்டிகை நாள் நெருங்கி வருவதால் மயிலாடுதுறையின் முக்கிய வணிக பகுதியான பட்டமங்கல தெருவில் புத்தாடைகள், பட்டாசு,நகைகள், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மயிலாடுதுறையை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் இன்று குவிந்தனர். பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மயிலாடுதுறை கடைத்தெருவில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸார் கூடுதல் பாதுகாப்பு அளித்தனர். வணிகப் பகுதிகளில் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதால், சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சாலைகளில் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக சென்றவாறு போலீஸார் பாதுகாப்பு அளித்தனர். அதுதவிர, ஓலிபெருக்கி மூலமும் பொதுமக்களுக்கு சிறப்பான முறையில் முன்னெச்சரிக்கை செய்து வருகின்றனர். AN ISO 9001 – 2008 CERTIFIED INSTITUTION, ALL COMPUTER COURSES UNDER ONE ROOF. STATE BANK ROAD, GROUND FLOOR, DEEN PLAZA, MAYILADUTHURAI. CONTACT: 99422 77822