Mayiladuthurai Newsமயிலாடுதுறை நகராட்சி நடத்திய டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் - Mayiladuthurai News மயிலாடுதுறை நகராட்சி நடத்திய டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் - Mayiladuthurai News

மயிலாடுதுறை நகராட்சி நடத்திய டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம்

மயிலாடுதுறை நவம்பர் 8, மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் உள்ள பள்ளி, கல்லூரி, திருமண மண்டபங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து பணிமனைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், சிறு மற்றும் குறு வணிக வியாபாரிகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களில் டெங்கு மற்றும் H1N1 (பன்றிக்காய்ச்சல்) பரவாமல் தடுப்பது தொடர்பான கூட்டம் இன்று மாலை நகராட்சி மயூரநாதர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஏற்படாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நல்ல தண்ணீர் தேங்காமல் தடுத்தலே இத்தகைய நோய்களை தடுக்க முடியும். தண்ணீர் தேங்குவதை தடுக்க தவறும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் வீடுகளில் ஆய்வு செய்து நோய் பரப்பும் கொசுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அபராதம் விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் நகராட்சி ஆணையர், நகராட்சி ஊழியர்கள், வர்த்தக சங்க தலைவர், வணிகர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீர் பிடிப்பதற்காக பைப்லைன்கள் அருகே தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் போட்டுவைத்திருக்கும் உபயோகமற்ற பொருள்கள், காலிமனைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் கப்கள், பயனற்ற பிளாஸ்டிக் பொருள்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத தரைத் தொட்டிகள், மேல்நிலைத் தொட்டிகள், டயர்கள், பயன்படுத்தாத உடைந்த சிமென்ட் தொட்டிகள், நீண்டகாலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் `ஏடிஸ்’ கொசுக்கள் முட்டையிட்டு, அது புழுவாக மாறி வளர்ந்து, கொசுவாக உருவாகிறது. இத்தகைய கொசு டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு டெங்கு பரவுகிறது.
ஆர்டர்களின் பேரில் சாப்பாடு, பிரியாணி, மட்டன், சிக்கன், சைனீஸ் வகைகள் மற்றும் மினி டிபன் மிகச்சிறந்த முறையில் செய்து தரப்படும்.