Mayiladuthurai Newsதீபாவளி வந்தாச்சு... மயிலாடுதுறையில் பட்டாசு விற்பனை படுஜோர் - Mayiladuthurai News தீபாவளி வந்தாச்சு... மயிலாடுதுறையில் பட்டாசு விற்பனை படுஜோர் - Mayiladuthurai News

தீபாவளி வந்தாச்சு… மயிலாடுதுறையில் பட்டாசு விற்பனை படுஜோர்

தீபாவளிக்கு இன்னும், ஒரு நாளே உள்ளது. மயிலாடுதுறையில் பெரியகடைத்தெரு, நாராயணபிள்ளை தெரு கூட்டுறவு அங்காடி, பாலக்கரை மற்றும் கூறைநாடு பகுதிகளில் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு முந்தைய கடைசி விடுமுறை தினமான இன்று பட்டாசுகளை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். பட்டாசு தயாரிப்பு, மூலப்பொருட்கள் மற்றும் தொழிலாளர்களின் கூலி உயர்வு, போக்குவரத்து செலவு உள்ளிட்ட பல காரணங்களால், ஒவ்வொரு ஆண்டும், பட்டாசு விலை உயர்ந்து கொண்டே வந்தது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு மயிலாடுதுறையில் பல்வேறு இடங்களில் பட்டாசு விற்பனை தொடங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நகரின் முக்கிய பகுதிகளில் புதிதாக பல பட்டாசு விற்பனை கடைகள் முளைத்துள்ளன. இங்கு காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும். நவம்பர் 5ஆம் தேதி இரவு முழுவதும் பட்டாசு கடைகள் திறந்திருக்கும். 6ஆம் தேதியும் கடைகள் உண்டு பட்டாசுகளை வாங்கி வெடிக்கலாம் என்கின்றனர் விற்பனையாளர்கள். காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பால் பட்டாசு விற்பனை சதவீதம் குறைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் மயிலாடுதுறை பட்டாசு விற்பனையாளர்கள்.
தாங்கள் வாங்கும் சொத்துக்களை உரிய முறையில் ஆவணமாக தயார் செய்து தருகிறோம். மகிழ்ச்சி லேசர் பிரிண்ட் அவுட் & ரியல் எஸ்டேட், பெரிய கண்ணாரத்தெரு, நேஷனல் பர்னிச்சர் எதிரில், மயிலாடுதுறை. தொடர்புக்கு: 9698746787