Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் நடைபெற்ற சோழ மண்டல அளவிலான சதுரங்க போட்டி - Mayiladuthurai News மயிலாடுதுறையில் நடைபெற்ற சோழ மண்டல அளவிலான சதுரங்க போட்டி - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் நடைபெற்ற சோழ மண்டல அளவிலான சதுரங்க போட்டி

மயிலாடுதுறை அக் 28, ரோட்டரி கிளப் ஆப் மயிலாடுதுறை டெல்டா, ரோட்டரி கிளப் ஆப் மயிலாடுதுறை மிட் டவுன் மற்றும் நாகை மாவட்ட சதுரங்க அசோஷியேஷன் இணைந்து நடத்திய சோழ மண்டல அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டி சில்வர் ஜீப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் 168 பேர் 9 வயதுக்குட்பட்டோர், 11 வயதுக்குட்பட்டோர், 13 வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர் மற்றும் 25 வயதுக்குட்பட்டோர் என 5 பிரிவுகளாக தரம் பிரிக்கப்பட்டு 5 சுற்றுகளில் போட்டியிட்டனர். 5 சுற்றுகளிலும் முதலிடம் பெற்ற 10 மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த போட்டியில் நடுவர்களாக R.K.குணசேகரன் உள்ளிட்ட 6 நடுவர்கள் செயல்பட்டனர். இந்த போட்டியில் ரோட்டரி சங்கத்தின் தலைவர், செயலர், பொருளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் திரளான பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.