Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் இடிந்து ஆபத்தான நிலையில் ஆற்றுப்பாலம் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் இடிந்து ஆபத்தான நிலையில் ஆற்றுப்பாலம் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் இடிந்து ஆபத்தான நிலையில் ஆற்றுப்பாலம்

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் திருமஞ்சன வீதியிலிருந்து ஆற்றங்கரையை கடக்க பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாலம் கிட்டதட்ட 19 ஆண்டுகளுக்கு முன் பொதுபணித் துறையால் கட்டப்பட்டது. பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் வரை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது திருமஞ்சன வீதி ஆற்றுப்பாலம். இந்த பாலத்தை தவிர்த்து ஆற்றை கடக்க வேண்டுமென்றால் 2 கிலோமீட்டர் சுற்றிதான் செல்ல வேண்டும். தற்போது பெய்த மழையால் 08-10-2018 அன்று திங்கட்கிழமை காலை 11 மணி அளவில் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போது வரை உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஆபத்தை அறியாத பொதுமக்கள் சிலர் தற்போதும் இந்த பாலத்தை பயன்படுத்துகின்றனர். இதனால் உயிர்சேதம் ஏதாவது ஏற்பட்டுவிடுமோ என அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் V.இராதாகிருஷ்ணன் அவர்களும், தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளும் சேதமடைந்த பாலத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் அதற்கு முன் சேதமடைந்த பாலத்தை யாரும் பயன்படுத்தாத வகையில் பாரி கார்டர் (barry carter) அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.