Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகள் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகள் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகள்

மயிலாடுதுறை அக் 26, தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தை உள்ளடக்கிய மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் மயிலாடுதுறை கல்வி மாவட்டத்தின் சார்பில் சில்வர் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நூறு பள்ளிகளைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 14 வயதுக்குட்பட்டோர்,17 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோர் என மூன்று பிரிவுகளில் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள் செயல்பட்டனர். இறுதியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.