Mayiladuthurai Newsமூவலூரில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் தவிப்பு - Mayiladuthurai News மூவலூரில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் தவிப்பு - Mayiladuthurai News

மூவலூரில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் தவிப்பு

மயிலாடுதுறை டிசம்பர் 6, மூவலூர் பகுதியில் வீடுகள், கடைகளுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் செய்வது அதிகரித்துள்ளதால், அவைகளை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் இரண்டு குரங்குகள் தினமும் உணவு தேடி வரத் தொடங்கி விட்டன. சில நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருள்களை தூக்கிச் செல்கின்றன. கடைகளுக்குள்ளும் புகுந்து பழம், பன் போன்றவற்றை எந்த பயமுமின்றி சர்வ சாதாரணமாக தூக்கிச் செல்கின்றன. வீட்டுக்குள் வரும் குரங்குகளை விரட்டினால் கடிக்க வருவதுடன் பொருட்களை தூக்கி கொண்டு சென்று விடுகிறது. குழந்தைகளையும் குரங்குகள் கடித்துள்ளது.
குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
இதனால் அச்சத்திலும், நிம்மதியின்றியும் தவித்து வருவதாகக் கூறும் பொதுமக்கள் இந்த குரங்குகளை கூண்டு வைத்துப் பிடித்து வனப் பகுதிக்குள் சென்றுவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கள் இல்ல கல்யாண சீர்வரிசை ஜமான்கள் மொத்தமாக வாங்க கை ராசி ஸ்தாபனம். ராஜ் எவர்சில்வர் பேன்சி ஸ்டோர். நெ.2 மெயின் ரோடு, மயிலாடுதுறை தொடர்புக்கு: 04364 – 222648