Mayiladuthurai Newsஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பதன் அர்த்தம் என்ன? - Mayiladuthurai News ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பதன் அர்த்தம் என்ன? - Mayiladuthurai News

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பதன் அர்த்தம் என்ன?

ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது  என்று மயிலாடுதுறைக்காரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வார்கள். ஆனால் இதைப் பொருள் அறிந்து எத்தனை பேர் சொல்கிறார்களோ  தெரியவில்லை. மயூரம் என்ற வடசொல் மயிலைக் குறிப்பது. மயில் உருவில் சிவபெருமானை அம்பிகை பூஜை செய்த தலம் ஆதலால் மயூரம் அல்லது மாயூரம் எனப்பட்டது. மயிலைக் காட்டிலும் அழகிய பறவையைக் காண்பது அரிது என்பதால் ஆயிரம் பறவைகள் இருந்தாலும் மயிலுக்கு ஒப்பாகுமா என்று இதற்கு வெளிப்படையாகப் பொருள் காண்பார்கள். ஆனாலும் இதற்கு உட்பொருள் ஒன்றும் உண்டு. மாயூரம் என்பதை மயிலுக்கு மட்டும் சம்பந்தப்படுத்தாமல்,  அவ்வுருவெடுத்து வந்து சிவபூஜை செய்த உமை அன்னைக்கு இணைத்துப் பார்ப்பதே சிறந்த பொருளைத் தரும். அவ்வாறு மயிலம்மனாக வந்து பூஜை செய்து சுய வடிவம் பெற்றுப்  பரமேஸ்வரனை மணந்து  கொண்ட கௌரிக்கு நிகர் யாரும் இல்லை என்பதால்  ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது  எனப்பட்டது.