Mayiladuthurai Newsபுயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை பார்வையிட்ட அமைச்சர் - Mayiladuthurai News புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை பார்வையிட்ட அமைச்சர் - Mayiladuthurai News

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை பார்வையிட்ட அமைச்சர்

மயிலாடுதுறை நவம்பர் 19, கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் அதிக சேதமடைந்துள்ளது. இதற்காக அனைத்து துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளும், அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு நிவாரண உதவிகள் மற்றும் மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். நாகை மாவட்டத்தில் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விட்டது. பல இடங்களில் பெரிய பெரிய மரங்கள் மின் வயர்கள் மீது விழுந்ததால் கம்பிகள் அறுந்து விழுந்து கிடக்கிறது. ஆயிரக் கணக்கான இடங்களில் டிரான்ஸ் பார்மர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது. இதற்கிடையே நாகை மாவட்டம் ஐவநல்லூர் ஊராட்சியில் நிவாரண பணிகளை துரிதப்படுத்த தமிழ்நாடு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
AN ISO 9001 – 2008 CERTIFIED INSTITUTION, ALL COMPUTER COURSES UNDER ONE ROOF. STATE BANK ROAD, GROUND FLOOR, DEEN PLAZA, MAYILADUTHURAI. CONTACT: 99422 77822