Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் கஜா புயலால் மரங்கள் சாய்ந்தன - Mayiladuthurai News மயிலாடுதுறையில் கஜா புயலால் மரங்கள் சாய்ந்தன - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் கஜா புயலால் மரங்கள் சாய்ந்தன

மயிலாடுதுறை நவம்பர் 16,கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. இரவு 12 மணியில் இருந்து 3 மணிக்கு இடையில் கஜா புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது, 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. நாகை மாவட்டத்தில் பல இடங்களில் கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறையில் இரவு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் நகரின் பல பகுதிகளில் வேறுடன் மரங்கள் சாய்ந்தன. நகரின் மையப்பகுதியான பாலக்கரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாசலில் இருந்த நூற்றாண்டிடு பழமையான மரம் சாய்ந்தது. இன்று கடை முழுக்கு என்பதால் இப்பகுதியில் பொதுமக்கள் அதிகமானோர் துலாகட்டத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். நகரின் முக்கிய பகுதிகளான சேந்தங்குடி மெயின்ரோடு, வள்ளலார் கோயில், போலீஸ் ஸ்டேஷன் ரோடு, அறிவாலயம் மேல்நிலைப்பள்ளி வாசல், ஏ.வி.சி பஸ் நிறுத்தம், பூக்கடை தெரு, காவிரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாலையில் சாய்ந்து கிடந்தன. ஆங்காங்கே நகராட்சி ஆணையர் தலைமையில் ஊழியர்கள் மரங்களை அப்புறப்படுத்தினர். அனந்ததாண்டவபுரம் பகுதியில் காற்றில் மின்கம்பம் முறிந்தது. நகரின் பல இடங்களில் மின்சார ஊழியர்கள் மின் இணைப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மயிலாடுதுறை நகராட்சிக்குட்ட பகுதியில் இரவிலிருந்து மின் இணைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மயிலாடுதுறை தைக்கால் தெரு பள்ளிவாசல் அருகே பெஸ்ட் கார்ஸ் நிறுவனத்திற்கு எதிரே தரங்கம்பாடி சாலையில் பாதாள சாக்கடை சுமார் 50 அடி நீளத்திற்கு இன்று அதிகாலை உள்வாங்கியுள்ளது.
ஆர்டர்களின் பேரில் சாப்பாடு, பிரியாணி, மட்டன், சிக்கன், சைனீஸ் வகைகள் மற்றும் மினி டிபன் மிகச்சிறந்த முறையில் செய்து தரப்படும்.