Mayiladuthurai Newsகஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை - Mayiladuthurai News கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை - Mayiladuthurai News

கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று கடலூர் – பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்றும் நாகையில் புயலின் தாக்கம் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். மயிலாடுதுறையில் பாதிப்பு ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பொதுமக்களுக்கு உணவு, சுகதாரமான குடிநீர், முகாம்களில் தங்க வைப்பதற்கான முன்னேற்பாடுகள், மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை செயயப்பட்டது. தீயணைப்பு மற்றும் பேரீடர் மீட்புக்குழுவும் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மல்டி கலர் விசிட்டிங் கார்டு ரூ 350/- முதல், மல்டி கலர் அழைப்பிதழ்கள் ரூ 3.25/- முதல் . தொடர்புக்கு: பத்மா டிஜிட்டல் ஸ்டுடியோ ஆடுதுறை. Cell: 9787095865