Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - Mayiladuthurai News மயிலாடுதுறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் இக்யுட்டாஸ் நிதி நிறுவனமும் இணைந்து நடத்திய தனியார் வேலைவாய்ப்பு முகாம் மயிலாடுதுறை தியாகி.ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டாவின் தலைவர் ஜேசி.செந்தில் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஜேசிஐ மண்டலம் 23ன் தலைவர் ஜேசி.கைலாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக இக்யுட்டாஸ் நிதி நிறுவன மனிதவள மேம்பாட்டு பிரிவை சேர்ந்த திரு.குணசேகர் மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். முகாமில் தனியார் துறைகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன. பன்னாட்டு நிறுவனங்களின் மேலாளர்கள் பலர் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர். ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா உறுப்பினர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர் அதன் செயலாளர் ஜேசி. திருமலைபாண்டியன் நன்றி கூறினார். மிகக்குறைந்த வட்டியில் 1 கிராமுக்கு ரூ. 2275 வரை தங்க நகை கடன். (விமலாம்பிகை திருமண மண்டபம் எதிரில்)