Mayiladuthurai Newsமனதில் வாழும் மாமனிதர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் 192 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா - Mayiladuthurai News மனதில் வாழும் மாமனிதர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் 192 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா - Mayiladuthurai News

மனதில் வாழும் மாமனிதர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் 192 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா

தமிழில் வெளிவந்த முதல் நாவல் எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்களின் 192 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா பீக்காக் சென்டினியல் லயன்ஸ் சங்கம் சார்பில் அதன் தலைவர் Lion.S.பவுல்ராஜ் அவர்களின் தலைமையில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் முகநூல் நண்பர்கள் முன்னிலையில் 11.10.2018 வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலைக்கு அவரது உறவினர் பால்ராஜ் அவர்களும், Lion.S.பவுல்ராஜ் அவர்களும் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேராசிரியர் புனிதா, வழக்கறிஞர் வேலுகுபேந்திரன், பால்ராஜ் ஆகியோர் சிறப்பரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை கச்சேரி சாலைக்கு மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பெயரை சூட்ட வேண்டுமெனவும், அவரது சிலையை பொதுமக்கள் பார்வையில் படும்படி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனர். இந்நிகழ்ச்சியை கவிஞர். இரா.சிவக்குமார் அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் தமிழ் ஆர்வலர்களும் கலந்து கொண்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு மரியாதை செலுத்தினர்.