Mayiladuthurai Newsநவீன இந்தியாவின் சிற்பிக்கு மயிலாடுதுறையில் பிறந்தநாள் விழா - Mayiladuthurai News நவீன இந்தியாவின் சிற்பிக்கு மயிலாடுதுறையில் பிறந்தநாள் விழா - Mayiladuthurai News

நவீன இந்தியாவின் சிற்பிக்கு மயிலாடுதுறையில் பிறந்தநாள் விழா

மயிலாடுதுறை நவம்பர் 14, இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர், அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் கருதப்படும் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடுகிறோம். அந்த வகையில் மயிலாடுதுறையில் நகர காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் ராமனுஜம் அவர்களின் தலைமையில் கூறைநாடு, காமராஜர் மாளிகை முன்பு வைக்கப்பட்டிருந்த ஜவகர்லால் நேருவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் இராமகிருஷ்ணன், வட்டாரத் தலைவர் ராஜா, மகளீர் அணி தலைவி கனிமொழி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அனைத்து விதமான மொபைல்களும் சிறந்த முறையில் குறித்த நேரத்தில் சர்வீஸ் செய்து தரப்படும். ஸ்ரீராம் டெலிகம்யூனிகேசன், ராம் நிவாஸ் காம்ப்ளக்ஸ், சங்கீதா மொபைல்ஸ் பின்புறம், கச்சேரி சாலை, மயிலாடுதுறை. தொடர்புக்கு: 04364 – 227944 / 96774 15215