Mayiladuthurai Newsஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு - Mayiladuthurai News ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு - Mayiladuthurai News

ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு

மயிலாடுதுறை செப்டெம்பர் 11, ஜேசிஐ வார விழாவினை முன்னிட்டு, “ஹெல்மெட்” அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை போக்குவரத்து காவல்துறை மற்றும் ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டா என்ற தன்னார்வ அமைப்பினர் பொதுமக்களுடன் இணைந்து நடத்திய இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மயிலாடுதுறை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மூர்த்தி உள்ளிட்ட காவல்துறையினர் தொடங்கி வைத்தனர். பேரணியில் போலீசாரும் இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்வு பதாகைகளுடன் சென்றனர். தலைக்கவசம் உயிர்க்கவசம், இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும், சாலை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதேபோல மறுபுறம் வாகன விபத்துகளும் அதிகரிக்கின்றன. இதனால் பலர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதே உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்பவரும், பின்னால் அமர்ந்து இருப்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது. இதில் ஜேசிஐ மயிலாடுதுறை டெல்டாவின் தலைவர் செந்தில்ஆனந்த், செயலாளர் திருமலைபாண்டியன், பொருளாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.