Mayiladuthurai Newsகடுக்காய்: இளமை தரும், தாம்பத்தியக் குறைபாடு நீக்கும், எடை குறைக்கும் - Mayiladuthurai News கடுக்காய்: இளமை தரும், தாம்பத்தியக் குறைபாடு நீக்கும், எடை குறைக்கும் - Mayiladuthurai News

கடுக்காய்: இளமை தரும், தாம்பத்தியக் குறைபாடு நீக்கும், எடை குறைக்கும்

கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம், ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய், இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய் போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன. காலையில் இஞ்சிச்சாறு, பகலில் (மாலை) சுக்குக் காபி, இரவில் உறங்கப்போவதற்கு முன்னர் விதை நீக்கிய கடுக்காயைத் தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து அருந்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும். அதாவது மலச்சிக்கல் நீங்கும். கபம் சமநிலைப்படும். இப்படி நோய்கள் நீங்குவதன் மூலம் கிழவனும் குமரனாகலாம் என்பதே அதன் பொருள். இதில் கடுக்காயின் பங்கு அதிகம். இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்படும் கல்பங்கள் ஆண்-பெண் உறவைப் பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை. மணிக்கணக்கில் கம்ப்யூட்டரே கதி என்று ஒரே இருக்கையில் அமர்ந்து பணி செய்வதால், சிலர் ஆண்மைத்தன்மை குறைவதாகச் சொல்கிறார்கள். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து, குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும். காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம், மதிய உணவு உண்டபிறகு சுக்கு கல்பம், இரவில் கடுக்காய் கல்பம் என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், அடுத்த சில மாதங்களில் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

கடுக்காய் கல்பம்
கடுக்காய் கல்பம் செய்ய அரை கிலோ (மஞ்சள் நிற) கடுக்காய், அரை லிட்டர் பசும்பால் தேவை. பாலில் கடுக்காயைப் போட்டு, அடுப்பில்வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி, கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும். மூன்று நாள்கள் உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும். கடுக்காயின் விதை நச்சு. ஆனால், அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும். இந்தக் கடுக்காய் கல்பத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம். மற்ற கல்பங்களைப்போல அல்லாமல் கடுக்காய் கல்பத்தை மட்டும் பல ஆண்டுகளுக்குச் சாப்பிடலாம். தினம் கடுக்காய் உண்போம் மிடுக்காய் வாழ்வோம்.