Mayiladuthurai Newsமயிலாடுதுறையில் தீ விபத்து - Mayiladuthurai News மயிலாடுதுறையில் தீ விபத்து - Mayiladuthurai News

மயிலாடுதுறையில் தீ விபத்து

மயிலாடுதுறை மே 28, மயிலாடுதுறை கேணிக்கரையில் குடிசை வீடுகள் நிறைந்த பகுதியில் இன்று மாலை 5:30 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திருவாரூர் ரோடு அருகே உள்ள கேணிக்கரையில் குடிசைகள் நிறைந்த பகுதியில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. குடிசை வீடு ஒன்றில் பற்றிய தீ, காற்றின் வேகத்தில், அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

நிகழ்விடத்திற்கு, தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்புத்துறையினர், பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து, அணைத்தனர். இந்த தீ விபத்தில், வீடுகளிலிருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மிகக்குறைந்த வட்டியில் 1 கிராமுக்கு ரூ. 2275 வரை தங்க நகை கடன். (விமலாம்பிகை திருமண மண்டபம் எதிரில்)