Mayiladuthurai Newsமயிலாடுதுறை அன்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் சமத்துவ தீபாவளி - Mayiladuthurai News மயிலாடுதுறை அன்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் சமத்துவ தீபாவளி - Mayiladuthurai News

மயிலாடுதுறை அன்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுடன் சமத்துவ தீபாவளி

மயிலாடுதுறை நவ 6, தரங்கம்பாடி சாலையிலுள்ள அன்பகம் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் முதன்முறையாக இந்து, இஸ்லாமிய மற்றும் கிருஸ்தவ நண்பர்கள் இணைந்து நடத்திய சமத்துவ தீபாவளி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சமூக ஆர்வலர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், சேவை சங்கங்கள், முகநூல் நண்பர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குழந்தைகளை போல் பட்டாசு வெடித்தும், மத்தாப்பு கொளுத்தியும் மகிழ்ந்தது சிறப்பாக இருந்தது. அந்த குழந்தைகளும் வாணவேடிக்கை பார்த்து மகிழ்ந்ததும் ஆர்பரித்ததும் காண்போர் நெஞ்சை நெகிழ செய்தது. கம்பி மத்தாப்பு கொளுத்தும் போது வரும் படபட சத்தமும், குச்சி மத்தாப்பு கொளுத்தும் போது வரும் சர்சர்சர் சத்தமும் மற்றும் புஸ்வானம் போட்டா தகர கொட்டகையில் மழை சோன்னு பெய்தால் வரும் சத்தமும் கேட்ட குழந்தைகள் உற்சாக துள்ளல் போட்டனர். இதில் சர்வ மதத்தை சேர்ந்தவர்களும் சொக்கித்தான் போனார்கள். இந்த நிகழ்ச்சியை செந்தில் ஆனந்த், சீனு, திணேஷகுமார், திருமலைபாண்டியன், சுரேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இந்த சமத்துவ தீபாவளி மயிலாடுதுறையில் சமய நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதாக அமைந்தது.
தாங்கள் அடகு வைத்துள்ள நகைகளை மீட்க, மறு அடகு வைக்க பண உதவி செய்யப்படும். தொடர்புக்கு: 98425 20040